முதல்வர் விஜய் பிறந்த நாளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தாம்பரம்: தமிழக முதல்வர் விஜயின், 52வது பிறந்த நாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையில், நேற்று பிறந்த நான்கு குழந்தைகளுக்கு, அமைச்சர் சரத்குமார் தலா 4 கிராம் தங்க மோதிரம் அணிவித்தார்.

தாம்பரம் மேற்கு பகுதி த.வெ.க., துணை செயலர் சாய் சரண்ராஜ் ஏற்பாட்டில், தங்க மோதிரம், பழங்கள் மற்றும் குழந்தை களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமார் பங்கேற்று, நான்கு குழந்தைகளுக்கு தலா 4 கிராம் தங்க மோதிரம் அணிவித்தார்.

மேலும், 38 குழந்தை களுக்கு பழங்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகத்தையும் அமைச்சர் சரத் குமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், த.வெ.க., நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement