முதல்வர் பிறந்த நாளில் 500 பேருக்கு அன்னதானம்
செம்பாக்கம்: தமிழக முதல்வர் விஜயின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு, தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் நேற்று 500 பேருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்டம், செம்பாக்கம் பகுதி 66வது வார்டு த.வெ.க., சார்பில், சேலையூர் அடுத்த மகாலட்சுமி நகர் ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோவிலில், முதல்வர் விஜய் பெயரில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து, 500 பேருக்கு அன்னதானம் மற்றும் துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, செம்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவரும் த.வெ.க., பிரமுகருமான சாந்தகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.
த.வெ.க., பிரமுகர் ஜெயபிரதீப் சந்திரன், பகுதி செயலர் அகிலன், வட்ட கழக நிர்வாகிகள் சூர்யா, அன்பு, தீபக், குருநாதன், கோதண்டராமன், ஸ்ரீராம், நாகராஜன், விக்னேஷ், நிஷாந்தி, சிலம்பரசன், மூர்த்தி, சக்தி மற்றும் த.வெ.க.,வினர் ஏராள மானோர் உடனிருந்தனர்.
மேலும்
-
மஞ்சுவிரட்டு
-
18ம் கால்வாய் சீரமைப்பு பணிகளை வேகப்படுத்துங்கள்: நீர் திறப்புக்கு முன் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஹிந்து முன்னணி கூட்டம்
-
இந்தியர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்; அமெரிக்க துாதர் செர்ஜியோ கோர் விருப்பம்
-
ஒலிம்பிக் தினவிழா
-
நீலகிரியில் ஹவுசிங் போர்டில் குடியிருப்போருக்கு... நோட்டீஸ் வினியோகம்!அபாய கட்டடங்களை இடிக்க அரசு நடவடிக்கை