கற்றாழையுடன் வளர்ந்த கஞ்சா செடி பறிமுதல்

ஆவடி: அயப்பாக்கத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தனியாக வசித்து வருகிறார்.

இவரது வீட்டு வாசலில் இருந்த ஒரு தொட்டியில், கற்றாழை செடியுடன் ஒன்றரை அடி உயரத்தில் கஞ்சா செடி வளர்ந்திருந்தது.

தகவலறிந்த அயப் பாக்கம் போலீசார், தொட்டியுடன் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

முதியவரிடம் விசாரித்த போது, 'அது எப்படி முளைத்தது என்றும், கஞ்சா செடி என்பது தெரியாது' என்றும் கூறியுள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement