குவைத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.5 லட்சம் மோசடி
கூடலுார்:குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்தவரை வண்டிப்பெரியாறு போலீசார் மும்பை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
குவைத்தில் வேலை வாங்கித் தருவதாக குமுளி அருகே வண்டிப்பெரியாறைச் சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் ரூ.4.5 லட்சம் பணம் பெற்று தலைமறைவான பத்தனம்திட்டாவை சேர்ந்த அருண் பிரகாஷ் 38, என்பவரை வண்டிப்பெரியாறு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் குவைத்தில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருண்பிரகாஷ் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வண்டிப்பெரியாறு போலீசார் தனிப்படை அமைத்து மும்பை விமான நிலையத்திற்கு சென்றனர். விமானத்திலிருந்து வந்த அருண்பிரகாசை கைது செய்தனர். இவர் ஏற்கனவே இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. பீர்மேடு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்