ராணுவ அதிகாரி தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கணும்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் வாமனன் தலைமை வகித்தார். படிகள் படிப்பக நிறுவனர் ஜெயக்குமார் வரவேற்றார்.
வக்கீல் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், ராணுவத்தில் அதிகாரியாக சேர்வதற்கு தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் வெற்றி பெற்ற வேண்டும். இது மிகவும் கடினமான தேர்வாகும். அந்த தேர்வில் வெற்றி பெற்ற தீபக் பிரபுக்கு பாராட்டு தெரிவித்தார். கம்பன் கலை மன்ற பண்பாட்டு மன்ற தலைவர் சண்முகம், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் பேசினர்.
என்.டி.ஏ., (தேசிய பாதுகாப்பு அகாடமி) தேர்வில் வெற்றி பெற்ற தீபக் பிரபு பேசுகையில், ‘‘நமது பகுதியில் இருந்தும், குறிப்பாக தமிழகத்தில் இருந்தும், ராணுவ அதிகாரி தேர்வுகளில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆர்வமும், தகுதியும் கொண்ட மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை, வழிகாட்டுதல்களை வழங்க தயாராக உள்ளேன்,’’ என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்