குதிரை எடுப்பு விழா

மானாமதுரை:மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயிலில் செவ்வாய் சாற்றுதல், குதிரை எடுப்பு விழா துவங்கியதை முன்னிட்டு கிராம மக்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.நேற்று மாலை 4:00 மணிக்கு குதிரைகளுக்கும் சுவாமி உருவங்களுக்கும் கிடா வெட்டி சிறப்பு பூஜை,அபிஷேக ஆராதனை நடந்தது.

பெண்கள் குழந்தை வரம் வேண்டி குழந்தை பொம்மைகளை தலைச்சுமையாக வந்து நிறைகுளத்து அய்யனார் கோயில் முன் இறக்கி வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி, வடமாடு மஞ்சுவிரட்டு, கபடி போட்டிகள் நடைபெற உள்ளது.

Advertisement