குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து தற்காத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், தமிழக அரசின் சிங்கப்பெண்கள் அதிரடி படையின் எஸ்.ஐ., ரெஜினா பானு தலைமையிலான குழுவினர் பங்கேற்று, மாணவியர், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். கல்வி இயக்குனர் குணசேகரன் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு நிகழ்வில், பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுப்பது எப்படி என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவியர் எதிரிகளிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான தற்காப்பு செயல்முறைகளையும் நிகழ்த்திக்காட்டினர்.
நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி, என்.சி.சி., என்.எஸ்.எஸ்., வழிகாட்டிகள் இயக்கம், ஜூனியர் ரெட் கிராஸ், சாலை பாதுகாப்பு படை ஆகியவற்றின் பொறுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் என்.சி.சி., அலுவலர் குணசேகரன் செய்து இருந்தார்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்