முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா அன்னதானம் வழங்கல்

விருத்தாசலம்: தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி, விருத்தாசலத்தில் த.வெ.க., சார்பில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் அப்பாஸ் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

இதில், மாவட்ட இணை செயலர் சங்கர், துணை செயலர் வாசு, ஒன்றிய செயலர்கள் சிவா, அப்பு, மாவட்ட நிர்வாகிகள் பாபு கணேஷ், முத்தரசன், சுதாகர், முஸ்தபா, குணசெல்வன், சக்திவேல், சுபாஷ், பாரதிதாசன், மங்கான் மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார், சுப்ரமணியன், ஆறுமுகம், பாலக்குமார், குணசேகரன், அரப்ஷா, அம்ஜத், சக்தி, நந்தகுமார், செல்வகுமார், இலியாஸ், மணிகண்டன், அம்மன் ராஜா, கார்த்திக், ராஜேந்திரன், ராமலிங்கம், மோகன், இளையராஜா, நகர நிர்வாகிகள் மனோஜ், கோபிநாத், சிவமலர், தினேஷ், இளங்கோ, தரண், ரமேஷ், புருஷோத், சதீஷ், பார்த்தசாரதி, அசோக், வெங்கட், ரகு, ரஹ்மத், பாண்டியன், வெங்கடேசன், சுபாஷ், கோபல்,முரளி, அபுதாகிர், தனசேகர், மணி, தாரிக், ஆனந்த், பிரகாஷ், வீரமணி, விஜய்,பிரபு, வினித்,கோகுல், அருள்தாஸ், அஜித், பால்ராஜ், சண்முகம், தினேஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

நகர இணை செயலாளர் பிரசாந்த், பொருளாளர் ராஜ்குமார் நன்றி கூறினர்.

அதைத்தொடர்ந்து பூதாமூர், ஆலடி ரோடு, தீர்த்த மண்டபத் தெரு, பூந்தோட்டம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றி, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement