விளையாட்டு உபகரணங்கள் இன்றி தவிக்கும் அரசுப்பள்ளி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் மாணவர்கள் தவிக்கும் நிலை உள்ளது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் உள்ள அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவது வழக்கம். கால்பந்து, கிரிக்கெட் பேட், பந்து, டென்னிஸ் பந்து, வலை, கேரம் போர்டு உள்ளிட்டவை வழங்கப்படும். இவற்றை உடற்கல்வி ஆசிரியர்கள் பராமரிப்பில் வைத்திருந்து மாணவர்களுக்கு விளையாட வழங்குவர்.
2022ல் அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலான பொருட்கள் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குண்டு எறிதல், வட்டு எறிதலுக்கு பயன்படும் இரும்பு குண்டு, தட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் மாணவர்கள் விளையாட தேவையான உபகரணங்கள் இல்லாமல் தவிக்கின்றனர்.
சில பள்ளிகளில் உடைந்த பந்து மட்டைகளை வைத்து மாணவர்கள் விளையாடுவது பரிதாபமாக உள்ளது. சில உடற்கல்வி ஆசிரியர்கள் சொந்த செலவிலும் சமூக ஆர்வலர்களிடம் பெற்றும் வாங்கி கொடுத்து வருகின்றனர். எனவே அரசு அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும்.
மேலும்
-
வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (23.6.2026)
-
மின்சார டூ - வீலர் ஆலையை ஈர்க்க தமிழக அரசு பேச்சு 'கிரெட்' நிறுவனத்தை 'மெட்டா' வளைக்க நினைப்பது ஏன்?
-
மின்சார இருசக்கர வாகன ஆலை தமிழகத்துக்கு ஈர்க்க அரசு பேச்சு
-
பி.எஸ்.எல்.வி., தொழில்நுட்பம் தனியாருடன் பகிர ஆலோசனை
-
இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சு
-
ரூ.211 கோடிக்கு வீடு வாங்கிய 'பிரஷ்வொர்க்ஸ்' நிறுவனர்