ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 குறைந்தது
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் (ஜூன் 22) ஆபரண தங்கம் கிராம், 13,600 ரூபாய்க்கும், சவரன், 1,08,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (ஜூன் 23), தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் குறைந்து, 13,560 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் சரிவடைந்து, 1,08,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரி வடைந்து, 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (ஜூன் 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 800 ரூபாய்க்கும், கிராமுக்கு 210 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்
பிரத்யேக வீடியோ!
தங்கம் விலை தடாலடி சரிவு-நகை வாங்க மக்கள் ஆர்வம்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஏறும் போது கிராமுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏறுகிறது. ஆனால் இறங்கும் போது சவரனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று இறங்குகிறது. இதற்கு நாங்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடிச் சென்று தங்கம் வாங்க வேண்டும்.. ?
இது செய்தியா நகை கடைகளுக்கு விளம்பரமா. ?
போர் முடிந்தது இன்றும் தங்கம் விலை குறையும்