நான் பேசினாலே பிரச்னை தான் : ‛தர்மன்' பட அறிமுக விழாவில் ரஜினி பேச்சு
நமது நிருபர்
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது பட அறிவிப்பு சென்னையில் நடந்தது. படத்திற்கு தர்மன் என பெயரிட்டுள்ளனர். அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். சிம்ரன், ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
பட விழாவில் ரஜினி பேசியதாவது:
‛நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள். பேசினால் இதோ பேசிட்டாரு என அதற்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள். ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது. நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்.
4வது இயக்குனர் அஸ்வத்
இந்த படத்திற்கு நான்காவது இயக்குனர் அஸ்வத். முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி கடைசியாக அஸ்வத் இயக்க உள்ளார். சிபி சொன்ன கதை பிடித்திருந்தது. ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட். அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம், அது கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைச்சுட்டோம்.
கமல் தந்த பொறுப்பு
கதையை நான் கேட்கல, நீங்களே கேட்டு சொல்லுங்க என கமல் சொன்னார். படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே கொஞ்சம் பயமாக இருந்தது. இந்த கதையெல்லாம் வேண்டாம் கமல், நீங்களும் கதை கேட்டு ஓகே சொல்லுங்க என்றேன்.
அஸ்வத் மீது பெரிய பொறுப்பு இருக்கு. அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை. இது ஒரு கூட்டு முயற்சி. படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அவரின் டிராகன் படம் பிடித்திருந்தது. அதில் நல்ல மெசேஜ் இருந்தது.
கமல் உடனான நட்பு
கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை. 1975களில் கமல் பெரிய ஸ்டார். நான் அந்த சமயம் தான் வந்தேன். ‛இளமை ஊஞ்சலாடுகிறது' படம் கமலால் தான் பண்ணினேன். அதில் முதலில் ஜெய் கணேஷ் நடிக்க வேண்டியது. கமல் தான் நான் நடிக்க வேண்டும் என ஸ்ரீதரிடம் பேசி நடிக்க வைத்தார். படத்தில் நான் செய்த மேனரிசங்களை பாராட்டியவர் கமல். அவர் செய்த உதவியாகட்டும், ஊக்கமாகட்டும் சொல்ல முடியாதவை''.
இவ்வாறு ரஜினி பேசினார்.
இவருடைய பாபா படம் தோல்வி அடைந்த போது பார்ட்டி வைத்து கொண்டாடினார்கள் , யார் வேண்டும் என்றாலும் வெற்றி படம் கொடுக்கலாம் 45 ஆண்டு காலம் ஒருவர் சூப்பர் ஸ்டாராக இருக்கின்றார் என்றால் அது உலக சாதனை தான் . இனி இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியுமா என்றால் அதுவும்
சந்தேகம் தான் .....
புதுப்படம் தயாரிப்பு , வெளியீடு, என்றால் மட்டுமே தமிழக மக்கள் உங்கள் ஞாபகத்துக்கு வருவார்கள் போல. அவசர காலங்களில் இவர் தமிழகத்திற்கு என்ன உதவி செய்திருக்கிறார் ? இதில் ஜோசெப் விஜய் முதல்வரானதில் புகைச்சல் வேறு . நீங்கள் நிறைய படங்களில் நடியுங்கள், தவறில்லை அதிக buildup தான் மக்களை எரிச்சலூட்டுகிறது
யாரும் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கெல்லாம் ஜோசஃப் விஜய் ஆட்சி இல்லை. கட்டாயம் ஜோசஃப் விஜயை விட கடினமான காலங்களில் அதிகமாகவே உதவியிருக்கிறார். குறைந்த விளம்பரத்தோடு, ஓட்டு என்கிற பிரதி பலன்கள் இல்லாமல்.
ரொம்ப கஷ்டப்படீங்களே விஜய் வரக்கூடாதுன்னு. ஸ்டாலின், உதயநிதி வாரத்துக்கு ஏ வ வேலு வைச்சு எவ்வளவு பிளான்
எல்லாம் தோத்து போச்சு.
இப்போ பேச்சு வேற
அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை செய்திருந்தால் இந்த மோசமான ஆட்சியிலிருந்து காப்பாற்றியதற்காக நன்றி தெரிவித்தருக்கலாம். Chess prayer, நீங்க ரூட் மாஃபியாங்களா?
கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை விட தெரியாத எதிரிகள் அதிகம் ?யார் யாரோ? யாரு டன் யாரோ?
பேசும் நேரத்தில் பேசாமல், ஏசும் நேரத்தில் பேசுவது சரியா ஐயா ?
உங்கள் நல்ல மனம், குணம் என்றும் வாழ்க வளர்க !
தர்மனாக இருப்பதை விட உத்தமனாக இருங்கள். உத்தமனாக இருப்பது மிக கடினம், ரஜினி சார்.
அதெல்லாம் இருக்கட்டும்.. எப்பதான் இளைஞர்களுக்கு வழிவிட்டு நீங்க ஓய்வு எடுப்பீங்க. தமிழகமக்கள் பாவம் இல்ல்லையா.. கொஞ்சம் கூட இரக்கமில்லையா உங்களுக்கு. நான் ரஜினியின் சிவாஜி படத்துக்கு பிறகு அடுத்துவந்த எந்தஒரு படமும் பார்க்கவில்லை. சகிக்கலை.
SUBRAMANIAM P, ஓய்வை அவரது ரசிகர்களும் மார்க்கெட்டுமே தீர்மானிக்கும். நீங்களோ ரூட் மாஃபியாவோ தீர்மானிக்காது. சிவாஜி படம் வந்து பதினைந்து வருடங்கள் ஆகின்றன. நடுவே வந்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி கண்டிருக்கினறன. உங்களுக்கு பிடிக்கவில்லை எனறால் நீங்கள் வெறுப்பாளராக இருக்க வேண்டும் அல்லது வெகு ஜன ரசனையிலிருந்து உங்கள் ரசனை மாறிவிட்டது.
இந்த வயசான ஆள்கிட்டேந்து தமிழக ரசிகர்களை யாராச்சும் காப்பாத்துங்களேன்..
காப்பாத்த வேண்டியது இவர் கிட்ட இருந்து இல்ல. இந்த கோமாளித்தனமான அரசு கிட்ட இருந்து. இவரை ரசிக்க இன்னும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்காங்க.
just retire and give other thousands of tamilians a chance to act in future tamil movies. you have made enough and be grateful for tamilians to support you all along even though you are not one.
His retirement will be decided by his fans and market. Not by you or Route Mafia. Lot of Tamilians have been already benefited by him. Many tamil producer's incurred huge losses due to present CM Joseph Vijay. If you deviding people by language or region, somebody may insist for religion based division. Is it okay for you Jerry?
தமிழர் நலன் குறித்து தமிழர்கள் பேச வேண்டும். வேறு மாநிலத்தவர் அங்கு சென்று அரசியல் செய்யுங்கள். சிகரெட்டை எப்படி புகைக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு வழிகாட்டியா இருந்த உங்களுக்கு நன்றி.
He is more misunderstood for his outright bold comments