அம்மோனியா கசிவு; இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்: ஆதார் மோசடி அம்பலம்
நமது நிருபர்
அம்மோனியா வாயு கசிவு குறித்த விசாரணையில், போலியான ஆதார் அட்டைகளை தொழிலாளர்கள் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில், கடந்த 21ம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஏழு பேர் ஒடிசாவையும், இரண்டு பேர் அசாமையும் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் அரசு விசாரணையில் பல தொழிலாளர்கள் போலியான ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி வேலை செய்து வந்த மோசடி அம்பலம் ஆகியுள்ளது. தமிழகத்தில் வாயு கசிவு சம்பவத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பெண் ஆந்திராவில் உயிருடன் உள்ளார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பூர்ணிமா ஜுவாங்கா என்ற ஒடிசா பெண், ஆந்திரப் பிரதேசத்தில் உயிருடன் பணிபுரிந்து வருவதும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் பதிவு செய்யப்பட்ட ஆதார் அட்டை அவருடையது அல்ல என்பதும் தெரியவந்துள்ளது. இது தொழிலாளர்களைப் பணியமர்த்த மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆதார் அட்டை மோசடி குறித்து அரசு ஏற்கனவே விசாரித்து வருவதாகவும், இறந்தவரின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, தற்போது தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஸ்ரீகாந்த் ஜுவாங்கா மீது போலீசில் புகார் அளிக்கப்படும், பிறகு இந்த மோசடி குறித்து விசாரணையில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (15)
சேனாகுமார் - ,
24 ஜூன்,2026 - 19:30 Report Abuse
ஒரே திருட்டு கூட்டம்... 0
0
Reply
Vasan - ,இந்தியா
24 ஜூன்,2026 - 17:06 Report Abuse
Its a medical miracle that a lady d as dead is alive. 0
0
Reply
அப்பாவி - ,
24 ஜூன்,2026 - 14:31 Report Abuse
என்னோட ஆதார வெச்சு எவன் எவன் காசு பாக்கறானோ? 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 ஜூன்,2026 - 12:48 Report Abuse
தமிழகத்தில் SIR நிறைவேற்றப்பட்டால், மேற்குவங்கம் மாதிரி, தமிழகத்தில் சட்டத்துக்கு விரோதமாக தங்கியிருந்து வேலை பார்க்கும் அத்தனை பேரும் பிடிபடுவார்கள். மேற்கு வங்கத்தில் இப்பொழுதுள்ள அரசாங்கம் எப்படி அந்த சட்டவிரோதிகளை வெளியேற்றியதோ, அதுபோல தமிழகத்திலும் இப்பொழுதுள்ள அரசு வெளியேற்றவேண்டும். 0
0
Pandi Muni - Johur,இந்தியா
24 ஜூன்,2026 - 15:43Report Abuse
மம்தா பேகம் மாதிரியான ஒரு இந்து விரோத மாடல் ஆட்சிதான் இங்கயும் நடக்குது. ஓட்டு வங்கிக்கு அவனே வேட்டு வச்சிக்குவானாக்கும் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
24 ஜூன்,2026 - 12:00 Report Abuse
தமிழ்நாட்டில் போலி திராவிட கூட்டம் ஆட்சியில் இருந்ததால், இருப்பதால் பல பங்களாதேஷிகள் போலி ஆதாருடன் குடியேறி உள்ளனர். என்னன்னு கேட்ட செகுலரிஸ்ம் என்று சொல்லுவான். எப்ப எங்கே குண்டு வைப்பான் என்று அரசாங்கத்திற்கே தெரியாது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிது. இதிலே பங்களாதேஷி வேறயா? 0
0
Reply
duruvasar - indraprastham,இந்தியா
24 ஜூன்,2026 - 11:37 Report Abuse
தமிழ்நாட்டில் நடக்கும் குற்ற பிண்ணனியில் திமுக இருக்கும்என்ற எதார்த்தம் உண்மையே. 75 வருட பாரம்பரியம். 0
0
Reply
சசிக்குமார் திருப்பூர் - ,
24 ஜூன்,2026 - 11:17 Report Abuse
அந்த நிறுவனம் முட்டை புகழ் கீதாவின் பினாமி தானாமே. அதனால் தான் திமுக அடக்கி வாசிக்குதாமே 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
24 ஜூன்,2026 - 11:02 Report Abuse
எல்லா கருணாநிதி தனத்தையும் மற்றவர்கள் செஞ்சிட்ட அறிவாலயத்தை இழுத்து மூடவேண்டிவரும். என்னய்யா கூற்று நடக்குது. அறிவாலயத்துக்கே இந்த பெண் குச்சி ஐசு கொடுத்து விட்டாளே . 0
0
Reply
S Srinivasan - ,
24 ஜூன்,2026 - 10:57 Report Abuse
must dmk behind this, to be prosecuted properly, police to do clear investigation 0
0
Reply
Krishna - bangalore,இந்தியா
24 ஜூன்,2026 - 10:53 Report Abuse
Arrest All Aadhar FraudstersBeneficiaries& AadharInsisting GovtOfficials Besides Aadhar Issuers 0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை
Advertisement
Advertisement