நிறைமாத கர்ப்பிணியை கண்டதும் ஓடோடி வந்த முதல்வர் விஜய்; பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி

29


சென்னை: நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். நிறைமாத கர்ப்பிணியான அக்சய லட்சுமி கீழே இருப்பதை கண்டதும், ஓடோடி மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று பணி நியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது: கடந்த 25 வருடமாக சீரழிந்து கிடக்கும் துறையை தூக்கி நிறுத்தும் நேரம் வந்துவிட்டது, ஒரே வருடம் 15,000 பேரை வேலைக்கு எடுக்கப்போறோம். இது தான் புது மாதிரியான அரசு. மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்க 30 நிமிடத்தில் முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

கடந்த ஆட்சியில் மின்துறை உருக்குலைந்து விட்டது. முதல்வர் விஜய் சொன்னதை கண்டிப்பாக செய்வார்.மக்களுக்கு பயந்து மட்டுமே அரசு செயல்படும், வேறு யாருக்கும் பயப்படாது. மின்துறை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை வெளியிடப்படும்.

கடந்த ஆட்சியில் மின்வாரியத்தை சீரழித்து விட்டனர். இதனை இப்போது சீரமைக்காவிட்டால் இனி எப்போதும் சீரமைக்க முடியாது. இப்போது உபயோகத்தில் உள்ள மின்மாற்றிகளில் 25 சதவீதம் பழமையானவை, 20 ஆண்டுகள் பழைய மின்மாற்றிகள் உள்ளன. இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement