லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம்: அமலாக்கத்துறை விசாரணை

12

சென்னை: லஞ்ச வழக்கில் சிக்கியுள்ள சார் -- பதிவாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்களின் சொத்து விபரங்கள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

தமிழகம் முழுதும் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 4ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, 46 சார் - பதிவாளர் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 37.75 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

அதேபோல, கடந்த 18ம் தேதி மாநிலம் முழுதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் என, 40 இடங்களில் சோதனை நடத்தி, 37.81 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, சார் - பதிவாளர்கள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.

இந்த வழக்கில் சிக்கிய சென்னை வளசரவாக்கம், சிதம்பரம், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், பரமக்குடி, ஸ்ரீவில்லிபுத்துார் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

அதேபோல, சென்னை விருகம்பாக்கம், செம்பியம், துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டம் விருத்தாசலம்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, திருப்பூர் மாவட்டம் பொங்கலுார், சேலம் சார் - பதிவாளர் அலுவலக அதிகாரிகளின் சொத்து விபரங்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.

Advertisement