சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை

சேத்தியாத்தோப்பு: விருத்தாசலம்–பரங்கிப்பேட்டை சாலையில் போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் வளைவில் சின்னநற்குணம், அம்மன்குப்பம் ஆகிய பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன.

இந்த சாலையின் வளைவில் வாகனங்கள் வளைந்து செல்லும்போது  எதிரே வரும் வாகனங்களில் மோதி தொடர் விபத்திற்குள்ளாகின்றனர்.

அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில் காலை மாலை நேரங்களில் எறும்பூர் வளைவில் மாணவ, மாணவிகள் கடக்கும்போது பாதிக்கப்படுகின்றனர்.

இந்த சாலையில் விபத்துகளை தடுக்க, எச்சரிக்கை பலகை, கருப்பு வெள்ளை கோடு, சிக்னல், மின் விளக்கு உள்ளிட்டவைகளை அமைக்க வேண்டும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரடி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.





 

Advertisement