போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கிணத்துக்கடவு: கொண்டம்பட்டி ஈஸ்வர் பொறியியல் கல்லூரி சார்பில், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ஈஸ்வர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள், ‘ஆன்ட்டி டிரக் கிளப்’ மாணவர்கள் மற்றும் பேரூர் டி.எஸ்.பி., சுரேஷ், கிணத்துக்கடவு போலீசார் இணைந்து போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இந்த பேரணியானது, கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் துவங்கி, செக்போஸ்ட் வரை சென்று, அங்கிருந்து மீண்டும் கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் வரை நடந்தது.
இதில், மாணவர்கள் கைகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில், போதை பொருள் தடுப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த பிளக்சில் ஈஸ்வர் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கையெழுத்திட்டனர். மேலும், போதைப்பொருளால் ஏற்படும் விளைவுகள் குறித்து டி.எஸ்.பி., மாணவர்கள் இடையே பேசினார்.
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை