2 ஆடுகள் திருடிய 3 வாலிபர்கள் கைது திட்டக்குடி அருகே பரபரப்பு
திட்டக்குடி, ஜூன் 25–
திட்டக்குடி அருகே நள்ளிரவில் ஸ்கூட்டரில், 2 ஆடுகளை திருடி சென்ற, 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து சென்றனர். அப்போது, நள்ளிரவு 2:00 மணியளவில் பெருமுளை – திட்டக்குடி சாலையில் சந்தேகத்தின்பேரில் ஸ்கூட்டரில், 3 வாலிபர்கள் 2 ஆடுகளை துாக்கிக்கொண்டு சென்றது தெரிந்தது.
அவர்களை நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் மூவரும் திட்டக்குடி அடுத்த நெடுங்குளத்தைச் சேர்ந்த ராதா மகன் செல்லதுரை, 24; பாண்டியன் மகன் அஜித்குமார், 20; அம்பேத்குமார் மகன் ஆகாஷ், 19; என்பதும், இவர்கள் செவ்வேரி ஆதிமூலம் என்பவரின் வீட்டின் முன்பு கட்டியிருந்த 2 ஆடுகளை திருடிச் சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரை, அஜித்குமார், ஆகாஷ் மூவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். ஆடுகளை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்
-
செங்கை புறநகர் பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்படும் அமைச்சர் ராஜ்குமார்
-
வேண்டவராசி அம்மனுக்கு கும்பாபிஷேகம் பாண்டூரில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
-
ரூ.300 கோடியில் கடம்பூர் தாவரவியல் பூங்கா திட்டம்... கிடப்பில்! : அரசு ஒதுக்கிய 138 ஏக்கர் நிலங்களை என்ன செய்வது?
-
மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
-
டூ - வீலர் கவிழ்ந்து வாலிபர் பலி
-
லஞ்ச அதிகாரிகள் சொத்து விபரம் அமலாக்கத்துறை விசாரணை