ஜம்மு காஷ்மீர் விவகாரம்; ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி
நமது நிருபர்
ஐநா பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியதற்காக பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்தது.
நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தானின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து தேவையற்ற கருத்துக்களை பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். அது எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இருக்கும். கூட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்பி பாகிஸ்தான் அரசியல் செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பர்வதனேனி ஹரிஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் தூதர் அர்ரியா கூட்டத்தை அரசியல்மயமாக்கியதும், எப்போதுமே இந்தியாவின் உள்விஷயமாக இருந்துவரும், தற்போதும், இனியும் இருக்கப்போகும் இந்தியப் பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து தேவையற்ற கருத்துக்களைத் தெரிவித்ததும் நம்பமுடியவில்லை'' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்: இஸ்ரேல் அமைச்சர் பிடிவாதம்
-
திரிணமுல், உத்தவ் தாக்கரே சிவசேனா எம்பிக்கள் கட்சிதாவல் விவகாரம்: விரைவில் சபாநாயகர் முடிவு
-
பனிக்காலம் முடிந்து வசந்த காலம்; வைகோ சூசகம்
-
சராசரியாக படிக்கும் மாணவரையும் அரவணைத்து செல்லுங்கள்; ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
-
குற்றத் தடுப்புக்குஆல்பா டீம்
-
அதிகாரிக்கு அபராதம்