சாப்ட் ஹாக்கியில் பதக்கம்பல்கலை மாணவிக்கு பாராட்டு
புதுச்சேரி, ஜூன் 25–தெற்காசிய அளவில் சாப்ட் ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு பல்கலை துணை வேந்தர் பிரகாஷ் பாராட்டினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரி உடற்கல்வி துறையில் முதலாம் ஆண்டு, பயிலும் மாணவி கீர்த்திகா, தெற்காசிய அளவில், நேபாளம் காத்மாண்டுவில் நடைபெற்ற சாப்ட் ஹாக்கி போட்டியில் பங்கேற்று, தங்கப் பதக்கம் வென்றார்.
சர்வதேச அளவில் பதக்கம் பெற்று புதுச்சேரி பல்கலைக்கு பெருமை சேர்த்த மாணவியை, பல்கலை துணை வேந்தர் பிரகாஷ் வாழ்த்தினார். பின்னர், மாணவியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் விளையாட்டுத் திறனைப் பாராட்டினார். மேலும், எதிர்காலத்திலும் உயர்ந்த சாதனைகளை நோக்கி தொடர்ந்து முன்னேறி, பிற மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என ஊக்கமளித்தார்.
அப்போது, சமூகக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லலிதா மற்றும் உதவிப் பேராசிரியர் ஜெகதீஸ்வரி உடனிருந்தனர்.
-: