சாய் சுதர்சன் சதம்: இந்தியா 'ஏ' அணி அபாரம்

காலே: முதல் டெஸ்டில் இந்தியா 'ஏ' அணியின் சாய் சுதர்சன் சதம் விளாசினார்.

இலங்கை சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இலங்கை 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி காலேயில் நடக்கிறது.

'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு ஆயுஷ் பாண்டே (25) சுமாரான துவக்கம் தந்தார். தேவ்தத் படிக்கல் (12), ருதுராஜ் கெய்க்வாட் (22) நிலைக்கவில்லை. தமிழக துவக்க வீரர் சாய் சுதர்சன், 130 பந்தில் சதம் விளாசினார். இவர், 175 பந்தில், 132 ரன் (4X19) குவித்தார்.

பின் இணைந்த கேப்டன் துருவ் ஜுரெல், ஷேக் ரஷீத் நம்பிக்கை தந்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். முதல் நாள் முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 333 ரன் எடுத்திருந்தது. ஜுரெல் (68), ரஷீத் (53) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை 'ஏ' அணி சார்பில் திலும் சுதீரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement