அதிகாரிக்கு அபராதம்

மேலுார்: கருங்காலக்குடி பக்ருதீன்அலி. அப்பகுதி பள்ளிவாசல் இடத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வட்ட துணை ஆய்வாளர்(தலைமை நில அளவையாளர்) கலையரசனிடம் தகவல் கேட்டார். உடல் நலக்குறைவால் கலையரசன் இறக்கவே தகவல் தர தாமதமானது. தகவல் ஆணையத்தில் பக்ருதீன் அலி மேல்முறையீடு செய்தார். தாமதமாக தகவல் வழங்கியதற்காக வட்ட துணை ஆய்வாளர் முத்துச்செல்விக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisement