குற்றத் தடுப்புக்குஆல்பா டீம்

சிவகங்கை,ஜூன் 25-

சிவகங்கை மாவட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் ரோந்து செல்லவும் ஆல்பா என்ற பெயரில் தனி அணியை எஸ்.பி., சிவபிரசாத் உருவாக்கியுள்ளார்.

எஸ்.பி., தலைமையில் சிவகங்கை, மானாமதுரை, திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட 5 சப் டிவிஷன்களில் 39 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தவும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும். ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் ஆல்பா என்ற பெயரில் டூவீலருடன் 16 போலீஸ் அணியை எஸ்.பி., சிவபிரசாத் உருவாக்கியுள்ளார். இவர்கள் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க மாவட்ட முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.     

Advertisement