போதை பொருட்களை ஒழிக்க விழிப்புணர்வு

ஓமலுார்; போதை பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி, சேலம் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து சமுதாயக்கூடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.


சேலம் திட்ட மேலாளர் தாமோதரன், போதை பொருள் இல்லாத ஆரோக்கிய சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி பேசினார். மற்றொரு திட்ட அலுவலர் சந்திரசேகரன், ஓமலுார் அரசு மருத்துவமனை, ஐ.சி.டி.சி., ஆலோசகர் கவிதா ஆகியோர், போதைப்பொருட்களால் ஏற்படும் மனநலம், உடல்நல பாதிப்பு, சமூக பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநங்-கையர் உள்பட பலர் பங்கேற்றனர்.மேட்டூர், சின்னபார்க்கில், 'போதையில்லா தமி-ழகம்' விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆர்.டி.ஓ., சுகுமார், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தனர். அரசு, தனியார் கல்லுாரி மாணவ, மாணவியர், விழிப்புணர்வு அட்டைகள் ஏந்தி, தினசரி சந்தை, பஸ் ஸ்டாண்ட் வழியே சென்று, அரசு தலைமை மருத்துவமனையில் நிறைவு செய்தனர். முன்னதாக வருவாய்த்துறையினர், போலீசார், மாணவ, மாணவியர், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்.
அதேபோல் நங்கவள்ளி போலீஸ் ஸ்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. வனவாசி அரசு பாலிடெக்னிக் முதல்வர் வரதகுரு, மாணவ, மாணவியர், கல்லுாரியில் இருந்து பேரணியாக புறப்பட்டு, வனவாசி பஸ் ஸ்டாண்ட், கீழ் வன-வாசி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இடைப்பாடி போலீசார் சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வெள்ளாண்டிவலசு கிறிஸ்தவ பள்ளி வளா-கத்தில் தொடங்கியது.
சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ., பூங்கொடி தொடங்கி வைத்தார். காந்தி நகர், சேலம் பிரதான சாலை, அம்மன் நகர், நைனாம்பட்டி வழியே சென்ற ஊர்வலம், இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முடிந்தது. போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்-றனர்.

Advertisement