குளத்தின் சுவரில் வளரும் அரச மரம்; ஆறே மாதத்தில் பல்லிளிக்குது 'பணி'
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆறு மாதங்களுக்கு முன், 34 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட, சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவரில் அரச மரக்கன்றுகள் வளர்ந்துள்ளதால் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
காஞ்சிபுரம் - அரக்கோணம் செல்லும் சாலையில், ஒலிமுகமதுபேட்டை அருகில் சர்வதீர்த்த குளம் அமைந்துள்ளது.
ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்குளம், புதுப்பொலிவு பெறும் வகையில், ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், 34 லட்சம் ரூபாய் செலவில் ஆறு மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டது.
இதில், குளக்கரையின் உட்புறத்தில் உள்ள நடைபாதை சீரமைக்கப்பட்டு டைல்ஸ் பதித்தல், குளத்தின் வெளிப்புற சுற்றுச்சுவர், குளத்தின் உட்புற தடுப்பு கம்பிகள் உள்ளிட்டவை சீரமைத்து தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டதால், சர்வதீர்த்த குளம் புதுப்பொலிவு பெற்றது.
இப்பணி நடந்து முடிந்து ஆறு மாதங்களே ஆன நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சுற்றுச்சுவரில் அரச மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால், இந்த மரக்கன்றுகளின் வேர்களால் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், நாளடைவில் சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழல் உள்ளது.
எனவே, சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவரில் வளர்ந்துள்ள அரச மரக்கன்றுகளை வேருடன் அகற்றி முறையாக பராமரிக்க ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து முகாமை துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்
-
வீணாக இருக்க அல்ல வாழ்வு 'காதல் காடு' வீணாவின் வெற்றிப்பயணம்
-
சேவைக்கு 'உயிர் கொடுத்த' முத்து சுகுணா
-
லண்டனில் இந்திய மாணவர் உயிரிழப்பு; உடலை மீட்க உதவி கோரும் பெற்றோர்
-
இயக்குனர் பாக்யராஜ் உடல் தகனம்; திரையுலகினர் கண்ணீருடன் இறுதி அஞ்சலி
-
சேவை ஒதுக்கீட்டில் படித்து பணிக்கு வராத 680 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை