இளம்பெண் பலாத்காரம் பஞ்சாயத்து செயலர் கைது

தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு, தானிப்பாடியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 54. இவர், சே.ஆண்டாப்பட்டு பஞ்சாயத்தில், செயலராக பணிபுரிந்தார். அதே பகுதியை சேர்ந்த, 45 வயது பெண்ணுடன் சுப்பிரமணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

அப்பெண்ணின், மனநலம் பாதிக்கப்பட்ட, 26 வயது மகளிடம், 'உன்னை, 100 நாள் வேலை திட்டத்தில் சேர்த்து, பணம் பெற்று தருகிறேன்' எனக்கூறி, சுப்பிரமணி பலாத்காரம் செய்தார். புகாரில், தண்டராம்பட்டு போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர்.

Advertisement