சிறந்த மாணவர்களுக்கு பரிசு

திருப்பூர்:பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் கேடயம், விருது மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பூர் பகுதியில் உள்ள 32 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சிறுபூலுவபட்டி ரிங்ரோட்டில் உள்ள அறக்கட்டளை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியம் வரவேற்றார். தலைவர் ஆர்.சுப்ரமணியம் தலைமை வகித்தார். நிப்ட் - -டீ கல்லுாரி முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். பொருளாளர் பொன்னுசாமி நன்றி கூறினார்.

Advertisement