ஏழைகளுக்கு நல உதவிகள்

குன்னத்துார்:தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் பொன்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னத்துார் அடுத்த ஆதியூர் ஒத்தப்பனை மேடு பகுதியில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் நல உதவிகளை வழங்கினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமசாமி அமைப்புசாரா தொழிலாளருக்கான அரசு திட்டங்கள் குறித்துப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் கவுதம், துணைச் செயலாளர் வைரமுத்து, மகளிர் அணிச் செயலாளர் ஷாலினி, துறைத் தலைவர் ஜான்சி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement