முன்னாள் மாணவர் சந்திப்பு

திருப்பூர்:திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ பேஷன் கல்லுாரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு விழா நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ், டீன் சம்பத், முதல்வர் ராதாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாணவர் சங்க துணைத்தலைவர் கதிரேசன் வரவேற்றார். உதவி பேராசிரியர் சங்கர கார்த்திகேயன், கல்லுாரி டீன் சம்பத், முதல்வர் ராதாமணி ஆகியோர் பேசினர். 1997 முதல் 2026 வரை கல்லுாரியில் பயின்று, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஆடைத் துறையில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்று, கல்லுாரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னாள் மாணவர் சங்க செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

Advertisement