தளபதி டிராபி கிரிக்கெட் போட்டி
திருப்பூர்:முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி, ஜூலை 1 முதல் 5 வரை திருப்பூரில் 'தளபதி டிராபி 2026' மாநில அளவிலான டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு டென்னிஸ் கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் த.வெ.க. இணைந்து நடத்தும் இப்போட்டிகள், கணியாம்பூண்டியில் உள்ள இசட்-3 ஸ்போர்ட்ஸ் மின்னொளி மைதானத்தில் பகல்--இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன. 24 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.
வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன. எம்.எல்.ஏ. பாலமுருகன் தொடங்கி வைக்கிறார். பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
ஏற்பாடுகளை இந்தியன் டென்னிஸ் கிரிக்கெட் பெடரேஷன் - மஹாராஷ்டிரா, தமிழகத் தலைவர் முஹம்மது ஷபி, ஹசன், தண்டபாணி, த.வெ.க. மாவட்ட துணைச்செயலாளர் குத்புதீன் ஆகியோர் செய்து வருகின்றனர்.