என்.ஜி.ஜி.ஓ.காலனியில் போக்குவரத்து சிக்னல் இல்லை: காலையும், மாலையும் ரோட்டை கடக்க மக்கள் படாதபாடு

1. கழிவை அப்புறப்படுத்த வேண்டும் ஒண்டிப்புதுார் அருள்ஜோதிபுரம் குடியிருப்பு பகுதியில், சாக்கடை கழிவை அள்ளி தெருவில் 10 நாட்களுக்கு மேல் போட்டு வைத்துள்ளனர். மழைக்காலம் துவங்கும் முன் அப்புறப்படுத்த வேண்டும்.

-கதிரவன்: 2. நாய்கள் தொல்லை வேடப்பட்டி குரும்பபாளையம் ராஜ் அவென்யூ குடியிருப்பு பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

- ஸ்ரீதரன்: 3. ஓடை ஆக்கிரமிப்பு சிங்காநல்லுார் உழவர் சந்தை அருகில் துார் வாரிய மழைநீர் செல்லும் ஓடையை ஆக்கிரமித்து தனியார் ஒருவர் சாலை அமைத்துள்ளார்.

- ராஜராஜன்: 4. சிக்னல் இயங்குமா? என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் சிக்னல் செயல்படாததால், காலை பள்ளி செல்லும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது.

- கோபிநாத்:

5. குப்பையால் சுகாதார சீர்கேடு கே.என்.ஜி.புதுார் பகுதியில் உள்ள பள்ளத்து பாலம் அருகே அதிகளவு கொட்டப்பட்டுள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

- தீப்திராஜன்:

6. குப்பை அகற்றப்படுமா? என்.ஜி.ஜி.ஓ. காலனி அரசு பெண்கள் பள்ளி கழிவறை அருகில் கிருஷ்ணமூர்த்தி வீதியில் குப்பை அகற்றப்படாமல் உள்ளது.

- பிரபாகர்:

7. ரோட்டில் தேங்கும் கழிவுநீர் குளத்துபாளையம் தொண்டாமுத்துார் ரோடு தனியார் பேக்கரி கழிவுநீர் ரோட்டில் விடப்படுவதால், கொசு உற்பத்தியாகிறது.

- வெங்கட்:

8. தெருவிளக்கு எரியவில்லை கணபதி கே.கே.நகர், 20வது வார்டு, சாய் கிருஷ்ணா மஹால் ரோட்டில் உள்ள மின்கம்பத்தில் 15 நாட்களாக மின் விளக்கு பழுதடைந்து உள்ளது.

- - தேவராஜ்:

9. அகற்றப்படுமா விளம்பர பலகைகள்? துடியலுார் - வெள்ளக்கிணறு ரோட்டில் ஏராளமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் இவற்றை அகற்ற வேண்டும்.

- ராஜா:

10. நடைபாதையில் மின்கம்பம் குனியமுத்துார் 87வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நடைபாதையில் உள்ள மின்கம்பம் உள்ளது. தடையாக உள்ள இக்கம்பத்தை அகற்ற வேண்டும்.

- பூஜா:

11. ரோடு மோசம் தண்ணீர் பந்தல் விளாங்குறிச்சி ரோடு முழுவதும் சேதமடைந்து கற்கள் வெளியே வந்துள்ளதால், பைக் ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

- சங்கர்:

Advertisement