மத்திய ஜவுளித்துறை அமைச்சர்கோவையில் ஆய்வு

கோவை: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ், தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தால்(சிட்ரா) உருவாக்கப்பட்ட மருத்துவ ஜவுளி பொருட்களின் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார்.

கோவை வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ், அரசூரில் உள்ள கே.பி.ஆர் மில்லில், ஏற்றுமதி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கிருந்த புறப்பட்டு விமான நிலையம் அருகில் உள்ள, சிட்ராவின் தொழில்நுட்ப ஜவுளி, மருத்துவ பயன்பாட்டுக்கான கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். இந்தியா ஜவுளி இயந்திரங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து, ஜவுளித்துறையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை அறிமுகம் செய்வது குறித்தும் தொழில்நுட்ப மேம்பாடுகள் குறித்தும் விவாதித்தார். தமிழ்நாடு ஜவுளித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் சந்தித்து ஜவுளித்துறை முன்னேற்றம் குறித்து அமைச்சரிடம் பேசினர். நிகழ்ச்சிக்குப் பின் விமானத்தில் சென்னை புறப்பட்டுச் சென்றார்.

Advertisement