ரவுடிகள் கண்காணிப்பு: 6 பேர் கைது
கோவை: கோவை மாநகர போலீசார் நடத்திய, சிறப்பு அதிரடி சோதனையில் ஆறு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 909 பேர் உள்ளனர். இவர்களின் செயல்பாடுகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜூன் 27 மாலை 6:00 மணி முதல் ஜூன் 28 அதிகாலை 6:00 மணி வரை ஒருங்கிணைந்த சோதனை நடந்தது.
இதில், 48 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. அதில், 25 பேர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டனர். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பட்டியலில் உள்ள பிற குற்றவாளிகள் 47 பேர் கண்காணிக்கப்பட்டு, 37 பேர் விசாரணைக்கு அழைத்துவரப்பட்டனர். அதில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இச்சோதனையின்போது, 2.36 கிலோ கஞ்சா, 28 போதை மாத்திரைகள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பதிவு செய்யாமல் ஏலச்சீட்டு நடத்தினால் நடவடிக்கை பாயும்: அமைச்சர் எச்சரிக்கை
-
ராஜா வாய்க்காலில் 3ல் தண்ணீர் திறப்பு
-
பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க கொ.ம.தே.க., கோரிக்கை
-
காங்.,கில் இனி கோஷ்டிகள் இருக்காது: மாணிக்கம் தாகூர்
-
நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் 1,100 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கல்
-
வீடு தேடிச்சென்று அழைத்து வீதியில் விட்டுச்சென்ற விஜய் அ.தி.மு.க., 'மாஜி' விமர்சனம்
Advertisement
Advertisement