நாமக்கல் பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களில் 1,100 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கல்
நாமக்கல்:நாமக்கல்
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில்,
1,100 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர்.
பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின்
தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் விசாலாட்சி
பெரியசாமி முன்னிலை வகித்தார். தாளாளர் கணபதி வரவேற்றார். முக்கிய
விருந்தினராக பங்கேற்ற, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும்
மருத்துவமனை டீன் டாக்டர் முருகலட்சுமி, பட்டங்களையும்,
விருதுகளையும் வழங்கி பாராட்டினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவன முன்னாள் இயக்குனர் விஸ்வநாதன்,
பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தி, ஊக்கமளித்து பேசினார்.இதில்,
பி.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'கார்த்திகேயன்
சென்னிமலை நினைவு விருது' பெயரில், இரண்டு தங்க பதக்கம், 'டாக்டர் பழனி
ஜி.பெரியசாமி விருது' மற்றும் 'திருமதி விசாலாட்சி பெரியசாமி விருது'
ஆகியவை, கல்வி மற்றும் ஒட்டுமொத்த திறன்களில் சிறந்து விளங்கிய
மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், பி.ஜி.பி., வேளாண்மை
கல்லுாரியில், கல்வியில் சிறந்த சாதனை படைத்த மாணவர்களுக்கு,
'டாக்டர் பழனி ஜி.பெரியசாமி விருது' பெயரில், இரண்டு தங்க பதக்கங்கள்
வழங்கப்பட்டன. பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் டீன் டாக்டர்
பெரியசாமி நன்றியுரை வழங்கினார்.
மேலும்
-
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை-நீரால் அவதி
-
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்ப-டுத்த வலியுறுத்தல்
-
தேசிய நெடுஞ்சாலையில் பூத்து குலுங்கும் மலர்கள்
-
வீதியில் கிடந்த வெள்ளி கொலுசு போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
-
பரவும் காய்ச்சலை தடுக்க காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
-
கடத்துாரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு