வீடு தேடிச்சென்று அழைத்து வீதியில் விட்டுச்சென்ற விஜய் அ.தி.மு.க., 'மாஜி' விமர்சனம்
மதுரை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:
சட்டசபை தேர்தலுக்கு பின், பெரும்பான்மை பெறுவதற்காக முதல்வர் விஜய் நடந்து கொண்ட விதம், அரசியல் கட்சிகளை கலகலக்க செய்து விட்டது.
அமைச்சர் பதவி தருவதாக அ.தி.மு.க.,வின் விசுவாச தலைவர்களின் வீடு தேடிச்சென்று பூச்செண்டு கொடுத்தார். அரியணையில் அமர்ந்தவுடன் அவர்களை வீதியில் விட்டுச்சென்ற அற்ப அரசியலை அரங்கேற்றியதால், தமிழகம் வேதனை அடைந்தது.
அடுத்தடுத்து அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் 'அதிகார பகிர்வு' என்ற ஆசை வார்த்தையால் ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற 'அலாவுதீனின் அற்புத விளக்கு' வார்த்தை தான் பொதுவுடமை இயக்கத்தையும் ஆட்டிப் படைக்கிறது.
முதல்வர் விஜய், இந்த அநாகரிக அரசியலை கைவிட்டு, ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து தன் கட்சியை வளர்க்க முன் வருவாரா?
இவ்வாறு உதயகுமார் கூறியுள்ளார்.
மேலும்
-
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை-நீரால் அவதி
-
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்ப-டுத்த வலியுறுத்தல்
-
தேசிய நெடுஞ்சாலையில் பூத்து குலுங்கும் மலர்கள்
-
வீதியில் கிடந்த வெள்ளி கொலுசு போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
-
பரவும் காய்ச்சலை தடுக்க காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
-
கடத்துாரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு