ராஜா வாய்க்காலில் 3ல் தண்ணீர் திறப்பு
ப.வேலுார்:ப.வேலுார்
அருகே, ஜேடர்பாளையம் பகுதியில் படுகை அணை உள்ளது. மேட்டூர் அணையில்
இருந்து, 81 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த படுகை அணையில்
இடதுபுறத்தில் ராஜா வாய்க்கால் தொடங்குகிறது. காவிரியாற்றின்
கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்காக ராஜா வாய்க்காலில் தண்ணீர்
நிறுத்தப்பட்டது. இதனால் ப.வேலுார் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் ராஜா
வாய்க்காலில் தண்ணீர் உடனடியாக திறந்து விட வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று விவசாய பாசன வசதிக்காக மற்றும்
பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்காக, ராஜா வாய்க்காலில் தண்ணீர்,
வரும், 3ல் திறந்து விடப்படும் என, ப.வேலுார் நீர்வளத்துறை உதவி
செயற்பொறியாளர் வினோத்குமார் அறிவித்துள்ளார். ராஜாவாய்க்காலை
நம்பி காவிரி கரையோர பகுதிகளான ப.வேலுார், ஜேடர்பாளையம், பரமத்தி,
பொத்தனுார், பிலிக்கல்பாளையம், வெங்கரை, பாண்டமங்கலம், பொய்யேரி,
நன்செய் இடையாறு, பாலப்பட்டி விவசாயிகள் வாழை, கரும்பு, வெற்றிலை,
தென்னை, மரவள்ளி சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும்
-
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை-நீரால் அவதி
-
கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்ப-டுத்த வலியுறுத்தல்
-
தேசிய நெடுஞ்சாலையில் பூத்து குலுங்கும் மலர்கள்
-
வீதியில் கிடந்த வெள்ளி கொலுசு போலீசில் ஒப்படைத்த மாணவர்கள்
-
பரவும் காய்ச்சலை தடுக்க காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
-
கடத்துாரில் அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாடு