இன்று தலைவராக பதவியேற்பு

5

தமிழக காங்., தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு, புதிய தலைவராக நியமிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் இன்று மாலை 4:00 மணிக்கு, கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்கிறார்.

இது குறித்து, மாணிக்கம் தாகூர் வெளியிட்ட 'வீடியோ' பதிவில், 'கடந்த 59 ஆண்டுகளுக்கு பின், காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்கள் உள்ளனர். ஆட்சியில் பங்கு என்பது நம் லட்சியமாக இருந்தது; அதை அடைந்து விட்டோம். முதல்வர் விஜயின் அன்போடும், அவருடைய தலைமையிலும் ஆட்சி நடக்கிறது. இப்படி இருக்கும் சூழலில், மாநில தலைவராக பொறுப்பேற்பது பெருமிதம் தருகிறது.

'ராகுலை நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்பதே அடுத்த லட்சியம். அதற்கு, 40 எம்.பி.,க்கள் தமிழகத்திலிருந்து வெற்றி பெற வேண்டும்' என கூறியுள்ளார்.

Advertisement