கே.ஈச்சம்பாடி நீரேற்றும் திட்டத்தை செயல்ப-டுத்த வலியுறுத்தல்
மொரப்பூர்; தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், நிலத்தடி நீர் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் முன்-னிலை வகித்தனர்.
இதில், மழைக்காலங்களில் கே.ஈச்சம்பாடி தடுப்பணையிலிருந்து வீணாக செல்லும் உபரிநீரை, 66 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தென்பெண்ணை-யாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி, கூட்டுறவு பயிர்க்கடன்களை நிபந்தனையின்றி, முழுமையாக ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
த.வெ.க. - தி.மு.க. 'பகை' ;கமென்ட் பாக்ஸ் 'புகை'
-
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு வரத்து... குறைவு ! நஷ்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் தவிப்பு
-
மொபட் திருட்டு
-
திறந்தும் பயன்பாடில்லாத நகராட்சி சந்தை கட்டடம்
-
அரசுப்பள்ளியில் பெற்றோர் கூட்டம்
-
தடையின்மை சான்று பெற லஞ்சமா? தனியார் பள்ளிகள் புகார் அளிக்கலாம்
Advertisement
Advertisement