ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கும் மழை-நீரால் அவதி
பாப்பிரெட்டிப்பட்டி; பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் அருகே பொம்-மிடி --முத்தம்பட்டி செல்லும் சாலையிலும், பொம்மிடி - விடிவெள்ளிநகர் சாலையிலும், பொம்மிடி - பழைய ஒட்டுப்பட்டி சாலையிலும் என, மூன்று ரயில்வே சுரங்கப்பாதைகள் உள்ளன. இந்த மூன்று பாதைகளிலும், அதன் நுழைவா-யில்களிலும் மழைநீர் குளமாக தேங்கி நிற்கிறது.
குறிப்பாக பொம்மிடி - முத்தம்பட்டி செல்லும் ரயில்வே சுரங்க பாதையில், சிறியளவில் மழை பெய்தாலும், தண்ணீர் வழிந்தோடாமல் சுரங்கப்-பாதையிலும் அதற்கு வெளியிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் வழியாக, தொப்பூர், குக்-கல்மலை, கொப்பக்கரை, முத்தம்பட்டி, மணிபுரம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்-காகவும், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பதற்கும், இந்த சுரங்கப்பாதை வழியாக பொம்மிடிக்கு வருகின்றனர். அவ்வாறு வரும்-போது சுரங்கப்பாதையிலும், அதன் நுழைவு பகு-திகளிலும் ஜல்லி பெயர்ந்து, போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக மாறி உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வழியாக சென்று வரும் போது கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பகுதி மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரை எளிதில் வடியும் வகையிலும், சுரங்கப்-பாதை அருகில் சேதமான சாலைகளை சீரமைக்-கவும் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்
மேலும்
-
த.வெ.க. - தி.மு.க. 'பகை' ;கமென்ட் பாக்ஸ் 'புகை'
-
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு வரத்து... குறைவு ! நஷ்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்கள் தவிப்பு
-
மொபட் திருட்டு
-
திறந்தும் பயன்பாடில்லாத நகராட்சி சந்தை கட்டடம்
-
அரசுப்பள்ளியில் பெற்றோர் கூட்டம்
-
தடையின்மை சான்று பெற லஞ்சமா? தனியார் பள்ளிகள் புகார் அளிக்கலாம்