திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத தெருக்கூத்து
பவுஞ்சூர்:வடக்கு வாயலுாரில் திரவுபதி அம்மன் கோவிலில் எட்டாம் நாள் திருவிழா விமரிசையாக நடந்தது.
வடக்கு வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பூரில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோண்டு தோறும், ஆனி மாதத்தில் திரவுபதி அம்மன் பிறப்பு மற்றும் வளர்த்தல் திருவிழா 18 நாட்கள் நடப்பது வழக்கம்.
எட்டாம் நாள் திருவிழாவான மாலை, மகாபாரத தெருக்கூத்து நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான படுகளம் விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. இதில் துரியோதனனை பீமன் கொல்வதும், துரியோதனின் ரத்தத்தை திரவுபதி அம்மன் தனது கூந்தலால் நனைப்பதும் விமரிசையாக நடைபெறும்.
அதே போல் லத்துார் ஒன்றியத்தில் அணைக்கட்டு, திருவாதுார், செங்காட்டூர் போன்ற பகுதிகளில் திரவுபதி அம்மனுக்கு விழா எடுப்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement