கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி பெண் பலி

பல்லாவரம்: கிரஷர் இயந்திரத்தில் புடவை சிக்கி, பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

பல்லாவரம் அடுத்த திரிசூலம், சத்தியா நகர், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 45. இவர், ஓராண்டாக அப்பகுதியில் உள்ள பாறைகளை உடைத்து துாளாக்கும் கிரஷர் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நேற்று காலை, கிரஷர் இயந்திரத்தினுள் பொடி கற்களை அள்ளி போடும் பணியில் ஈடுபட்டார். அப்போது, இயக்கத்தில் இருந்த, ‘கன்வேயர் பெல்ட்’டில், மகேஸ்வரியின் புடவை சிக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், கழுத்து இறுகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பல்லாவரம் போலீசார், உடலை, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement