துணைவேந்தர் நியமன விவகாரம் கவர்னருடன் அமைச்சர்கள் சந்திப்பு
சென்னை: துணைவேந்தர்கள் நியமன விவகாரத்திற்கு, சுமுக தீர்வு காண, அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை சந்தித்து பேசினர்.
தமிழகத்தில் இயங்கும் பல்கலைகளில், அண்ணா பல்கலை, மதுரை காமராஜர், கோவை பாரதியார், சென்னை பல்கலை உட்பட 12 பல்கலைகளில், துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன.
இதற்கு, தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே நடக்கும் மோதலே காரணம். துணைவேந்தர் தேடல் குழுவில், நான்காவது உறுப்பினராக, யு.ஜி.சி., பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என, கவர்னர் வலியுறுத்தினார்.
ஆனால், தமிழக அரசு அதை ஏற்கவில்லை. இதற்கிடையில், பல்கலை துணைவேந்தர்களை, முதல்வரே நியமனம் செய்யும் வகையில், சட்டம் நிறைவேற்றப்பட்டு, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான, நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், பல்கலை துணைவேந்தர்கள் நியமனம், தாமதமாகி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், 'பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் சுமுக தீர்வு காணப்படும்' என, தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை, உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர், கவர்னர் மாளிகையில் நேற்று சந்தித்து பேசினர்.
சந்திப்பின்போது, பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில், கவர்னர் மாளிக்கைக்கும், தமிழக அரசுக்கும் இடையே நிலவும் முரண்களை கலைந்து, சுமுக தீர்வு காண்பது தொடர்பாக, பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், தமிழக பல்கலைகளுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்கின், இறுதி விசாரணையை, ஜூலை 29ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
மேலும்
-
அமோனியா வாயு கசிவு விவகாரம்: 68 பேர் அசாமிற்கு அனுப்பி வைப்பு
-
முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை பணிகள் காலதாமதம்! வனத்துறை அனுமதிக்காக பல மாதங்களாக காத்திருப்பு
-
கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு; அபராதம், பறிமுதல் தொடர இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
-
ஏரி குடிமராமத்து திட்டத்தில் செய்ய முடியாத 74 பணிகளுக்கு செலவிடப்பட்ட நிதியை திரும்ப செலுத்த உத்தரவு
-
செய்த வேலைக்கு பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் திண்டாட்டம்! அரசியல்வாதிகள் வாய்மொழி உத்தரவை நம்பியதால் சிக்கல்
-
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா: சட்டசபை செயலர் ஐகோர்ட்டில் பதில்