அரிசி விலை கிலோவுக்கு ரூ.10 உயர்வு: உச்சம் தொட்டது சீரக சம்பா அரிசி விலை
- நமது நிருபர் -
'தமிழகத்தில், அரிசி விலை கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. போதிய மழையின்மை, நெல் விளைச்சல் குறைவு உள்ளிட்டவையே, அரிசி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை, 21 லட்சம் டன். இதை, ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
கடந்தாண்டு கர்நாடகாவில் சில இடங்களில் மழை இல்லாததால், உயர் ரக சன்ன நெல் விளைச்சல் பாதித்துள்ளது.
இது தவிர, லாரி வாடகை கட்டணம், 25 சதவீதம் உயர்ந்துள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் அரிசி கிலோவுக்கு, 5 முதல், 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில், கடந்த பருவத்தில் நெல் விளைச்சல் குறைவு.
கோடை மழை மற்றும் தற்போதைய பருவமழை கை கொடுக்காததால், கோடை மகசூலும், தற்போதைய குறுவை சாகுபடியும் பொய்த்து வருகிறது. தமிழக, கர்நாடகா அணைகளில் நீர் குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடியை உறுதி செய்ய முடியவில்லை.
அரிசி ஆலைகளுக்கான மின்சார நிலை கட்டணம், 5,000 ரூபாயில் இருந்து, கடந்த ஆட்சியில், 20,000 ரூபாயாக உயர்த்தினர்.
ஆலை இயங்காவிட்டாலும், 20,000 ரூபாயை செலுத்தியே ஆக வேண்டும் என்பதால், அந்த செலவினமும் அரிசி விலையில் ஏற்றப்படுகிறது. இதனால் வரும் காலங்களில் அரிசி விலை மேலும் உயரும் சூழல் உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க, மாநில செயலர் பரணீதரன் கூறியதாவது:
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சன்ன ரக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
அந்த மாநிலங்களில், நெல் இருப்பு குறைவாக உள்ளதால், அங்குள்ள ஆலைகளின் தேவைக்கு போகவே, எங்களுக்கு நெல் கிடைக்கிறது. சில மாதங்களில், 1 கிலோ நெல்லுக்கு, 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. தவிர, லாரி வாடகையும் உயர்ந்துள்ளது.
இதில், அதிகளவில் ஏற்றுமதியாகும் சீரக சம்பா அரிசி, 2025 ஏப்., மாதம், 84 ரூபாயாக இருந்தது. தற்போது, 180 ரூபாய் என விற்கப்படுகிறது.
ஓராண்டில், கிலோவுக்கு, 96 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அரிசி தட்டுப்பாடு காரணமாக, சில்லரை விற்பனையில், கூடுதல் விலை வைத்தும் சிலர் விற்கின்றனர்.
வறட்சி, மழைப்பொழிவு இல்லாதது மற்றும் சன்ன ரக நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி விலை மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதாவது விஜய் அரசு பத்து பைசா லஞ்சம் வாங்காமல் கோப்புகளில் கையெழுத்து போடுவதால் எல்லா துறையினரும் செலவேயில்லாமல் அனுமதி பெற்று விடுவதால், அந்தக் காசை ஆட்டை போடத் தான் உணவுப் பொருட்கள் மீது கை வைக்கிறார்கள். பூவாவுக்கு எங்களிடம் தானே வந்தாகனும் என்கிற திமிர்....
எதைக் காரணம் காட்டி இப்படி விலை ஏற்றுகிறார்கள் ???? டீசல் விலை வெறும் 3 ரூபாய் ஏறியதற்காக ஒரு முட்டையின் விலையை 7.50 ரூபாயாக ஏற்றியிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 4 கோடி முட்டைகள் நாமக்கல் பண்ணையிலிருந்து மட்டும் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.
பார்த்துக்க கொள்ளுங்கள் 3 ரூபாய் டீசல் விலையை காரணம் காட்டி எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்று....
இதே மாதிரி தான் தமிழ்நாட்டில் ஒரு கிலோவிற்கான அரிசி, பருப்பு , மளிகை விலைகள் எல்லாம் ஏற்றியிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி பிழைக்கும் வணிக சங்க கூட்டத்திற்கு எதிராக இந்த கம்முனிஸ்ட் கட்சிகள் போராடுவார்களா ????? மாத சம்பளம் வெறும் 10,000 / 15,000 என்று வாங்கும் படித்த இளைஞர்களின் குடும்ப வாழ்வாதாரதிற்காக இந்த கட்சிகளும், வியாபார / வணிக சங்கங்களும் ஒரு புல்லைக் கூட பிடுங்கிப் போட்டது கிடையாது. ஒரு பக்கம் உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இந்த சோம்பேறி சங்கங்கள் எல்லாம் கம்முனிச - திராவிட அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன.
2 வருடத்தில் மூன்று முறை இப்படி சகட்டுபமேனிக்கு மின்கட்டணத்தை ஏற்றிவிட்டு, திமுக ஆட்சி காலத்தில் மின்பகிர்வு ஆணையத்தின் நிதி பற்றாக்குறையை குறைந்திருக்கிறது இது சாதனை என்று கூறும் அறிவீலிகளை என்ன என்று சொல்ல. இமற்ற துறைகளை போல் இதிலும் ஊழல் உயர்த்ததுதான் கண்ட பலன்
கடந்த ஆட்சியில் 20000
இந்த ஆட்சியில் இலவசமாக
கெடுப்பது மாதிரி செய்தி
விலை ஏற்றுவதற்கு ஏதாவது காரணம் வேண்டும் அவ்வளவுதான். இருக்கிற எல்லா பாசுமதி மற்றும் சீரக சம்பா அரிசியை வெளிநாட்டுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்து விட்டு இங்கே தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை ஏற்ற வேண்டியது தான்
சீரக சம்பா அரிசியின் இரட்டை மடங்கு விலை உயர்வு பிரியாணி பிரியர்களுக்கு பெரும் சோகத்தைத் தரும்.
பெட்ரோல் டீசல் விலையை பற்றி மணிக்கணக்கில் பேசுபவர்கள் இதைப்பற்றி வாய் திறக்கமாட்டார்கள்.
தண்ணீர் குடிக்கலாம்
இந்த ஒரு காரணத்துக்காகவே 1967இல் காங்கிரஸ் பதவி இழந்தது.
காரணம் அதுவல்ல. "அறிஞருக்கெல்லாம் அறிஞர் பேரறிஞர்" என கட்டுமரத்தால் பட்டம் கட்டபட்ட அன்னாதொரே அளித்த பொய் வாக்குறுதியான "ரூபாக்கு மூனு படி நிச்சயம் ஒரு படி அரிசி"
அன்னாதொரே பற்றி ஓர் பெரிய பொய் பிம்பம் கட்டப்பட்டது. அதை உடைத்தெறிந்தவர் உதயமூர்த்தி.
என்னய்யா, கதையாக இருக்கிறது. டீசல் விலை எட்டு சதம் கூட ஏறவில்லை. லாரி வாடகை 25 சதம் ஏறிவிட்டதா? அப்படியே ஏறினாலும் ஆந்திராவிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் லாரி வாடகை லோடுக்கு இருப்பதைந்தாயிரம் ரூபாய் அதிகமானாலும், பத்தாயிரம் கிலோ கொண்ட ஒரு லாரி லோடுக்கு கிலோவிற்கு இரண்டரை ரூபாய்தான் ஏற்ற முடியும். தமிழ் நாட்டின் பெரும்பாலான அரிசி ஆலைகள் கழக உடன்பிறப்புகள் கையில். ரேஷன் அரிசியை வாங்கி பாலிஷ் செய்து வெளி மார்கெட்டில் விற்று லாபம் பார்ப்பவர்கள். அவர்கள் அறுபத்தேழின் தீயமுக அரிசி அரசியலை கையில் எடுக்கிறார்கள்.மேலும்
-
தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி: அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
-
அரசு பஸ்கள் 'டிரிப் கட்': மலைப்பகுதி மக்கள் அவதி
-
துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி; கட்சிக் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு
-
தீ தடுப்பு மீட்பு பயிற்சி
-
ஒப்பந்தம் பெற பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்; அமைச்சர் ஆதவ் அறிவிப்பு
-
ஐரோப்பாவில் கோர தாண்டவமாடும் வெப்பஅலை; ஸ்பெயின், பிரான்சில் 2000 பேர் பலி