சிறுமி கொலை வழக்கில் மூன்று பேர் சாட்சியம்

கோவை: சூலுார் அருகே, 10 வயது சிறுமி, கடந்த மாதம் 21ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக நாகப்பட்டினம் கார்த்திக்,33, உடந்தையாக இருந்த தஞ்சாவூர் மோகன்,31, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில், கடந்த 10ம் தேதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பகவதியம்மாள் முன்னிலையில், 24ம் தேதி அரசு தரப்பு சாட்சி விசாரணை துவங்கியது.

நேற்று நடந்த விசாரணையில், 'சிசிடிவி கேமரா' காட்சிகளை ஆய்வு செய்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மூன்று பேர் சாட்சியம் அளித்தனர். 114 சாட்சிகளில், 10 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.

Advertisement