26 கிலோ போதைப்பொருள் கைப்பற்றி 18 கடைகளுக்கு சீல்

கோவை: போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பள்ளி, கல்லுாரிகளை சுற்றியுள்ள இடங்களில், உணவு பாதுகாப்பு துறை, போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்தினர்.

இம்மாதம் 15 - 28 ம் தேதி வரை, ஆயிரத்து 487 கடைகளில் நடத்திய ஆய்வில், 26 கிலோ 720 கிராம் போதைப்பொருள் கைபற்றப்பட்டது.

இவை விற்கப்பட்ட, 18 கடைகளுக்கு சீல் வைத்து மூடப்பட்டது. இக்கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வீதம், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தெரிவித்தார்.

Advertisement