போதை பழக்கத்திலிருந்து மீள அமைச்சர் அறிவுரை
கோவை: மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அங்கு, போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு வார்டில் அனுமதிக்கப்பட்டோரின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
அங்கு அனுமதிக்கப்பட்ட 34 வயது கொண்ட நபரிடம், போதை பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமென கூறினார். வார்டில் இருந்த மற்றொருவரிடம், உங்கள் பகுதியில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. இனி அப்பழக்கத்தில் இருந்து விரைவில் மீண்டு வெளியே வாருங்கள் என கூறினார்.
ஆய்வின் போது, மருத்துவமனையில் பார்க்கிங் வசதி இல்லை என அங்கிருந்த பெண்மணி ஒருவர் கூறியதும், அதுகுறித்து 'டீன்' கீதாஞ்சலியிடம் விசாரித்தார்.
மதுவிலக்கு துறை அமைச்சர் என்பதால், நேரடியாக போதை மீட்பு வார்டுக்கு சென்றதும், அங்குள்ளோரின் நிலை குறித்து கேட்டறிந்ததும், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாசகர் கருத்து (1)
Ram pollachi - ,
01 ஜூலை,2026 - 00:42 Report Abuse
தினமும் சரக்கு அடிப்பவர் பலருக்கும் எடை குறைதல், உச்சி முதல் பாதம் வரை புண்,தொண்டை கட்டு,உட்பட பல பிரச்சினை உள்ளது...போதை துறை இருப்பதால் தான் அதற்கு அமைச்சர் ஆக வாய்ப்பு கிடைத்துள்ளது,போதையை ஒழித்து விட்டால்?சவக்கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர் பலர் போதையில் தான் இருப்பார்கள்? எடுத்து சொல்லாமல் எடுத்துக்காட்டாக நாம் இருக்க வேண்டும். 0
0
Reply
மேலும்
-
அணைகள் நீர் மட்டம்
-
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கும் தனி நபர்கள்; டி.ஜி.பி.,யிடம் தி.மு.க., புகார்
-
அமெரிக்காவில் தமிழ் அமைப்பு மாநாடு: ஜூலை 3ல் அண்ணாமலை, ஸ்ரீதர் வேம்பு சிறப்புரை
-
மேகதாது அணைக்கு எதிர்ப்பு; பிலிகுண்டுலுவில் நடைபயணத்தை துவங்கினார் அன்புமணி
-
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு; தர்மபுரி அக்சிதா முதலிடம்
-
இந்தியாவின் 4 நிறுவனங்கள் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா
Advertisement
Advertisement