புள்ளியியல் தின விழா
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி பொருளாதாரத் துறை சார்பில் தேசிய புள்ளியியல் தின விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். பொருளாதாரத் துறை தலைவர் அழகேசன் வரவேற்றார்.
மாவட்ட புள்ளியியல் துறை துணை இயக்குநர் துரை தரவுகளின் அடிப்படையில் முடிவெடுப்பதன் அவசியம், அரசுத் திட்டங்களில் புள்ளியியலின் பங்கு, பொருளாதார வளர்ச்சியில் தரவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வினாடி- வினா போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.
மாணவியர் அறிமுக விழா
வாடிப்பட்டி: பரவை மங்கையர்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் உமா பாஸ்கர் வரவேற்றார். மங்கையர்கரசி கல்வி குழுமத்தைச் சேர்ந்த சக்தி பிரனேஷ் கல்வி நிறுவனத்தின் நடைமுறைகள் குறித்தும், உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும் எனவும் பேசினார்.
கல்லுாரி தலைவர் அசோக்குமார் கல்வித்துறையில் சிறந்து விளங்கிய பல முன்னோடிகளின் சாதனைகள் குறித்தும், கல்விப்புல தலைவர் செந்துார் பிரியதர்ஷினி நற் சிந்தனைகள் குறித்தும், சிறப்பு விருந்தினரான சென்னை மாற்றம் அறக்கட்டளை நிறுவனர் சுஜித்குமார் உயர்கல்வியின் முக்கியத்துவம், ஆங்கில மொழியின் அவசியம் குறித்தும் பேசினர். பசுமை மன்றம் சார்பாக பெற்றோருக்கு மூலிகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
மாற்றமில்லை! இந்த வாரம் ஒசைரி நுால் விலையில்... வாராந்திர விலை நிர்ணயம் திட்டவட்டம்
-
சைக்கிளிங் போட்டி பங்கேற்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் பள்ளி பராளுமன்ற தேர்தல்மாணவ, மாணவியர் ஆர்வம்
-
இன்றைய மின் தடை
-
விளம்பர விருப்பம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடமாடும் விண்வெளி கண்காட்சி
-
எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு