இருதரப்பு இடையே மோதல் 16 பேர் மீது வழக்கு

குள்ளஞ்சாவடி: இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலில், 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த கீழ் வடக்குத்து பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் புகழேந்தி, 25; இவர் நேற்று முன்தினம் சிவநந்திபுரம் பகுதிக்கு சென்ற போது, கோ.சத்திரம், பழையூரை சேர்ந்த தமிழ்மணி என்பவர், முன்விரோதம் காரணமாக இவரை தாக்கினார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த புகழேந்தி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் புகழேந்தியை தாக்கிய துரை, புருஷோத், மனோமூர்த்தி, சுந்தர்ராஜ், கமல் ராஜ், தரணி, ரகுநாதன் மற்றும் எதிர் தரப்பை சேர்ந்த தமிழ்மணி, சிவனேசன், புகழேந்தி, அறிவழகன், பாலகுரு உள்ளிட்ட, 16 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement