குறைந்தது மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல்தனியாருடன் போட்டியிட முடியாமல் திணறல்
தேனி, ஜூலை 1–தேனி மாவட்டத்தில் ஆவின் பால் தினசரி கொள்முதல் 50 ஆயிரம் லிட்டரில் இருந்து 40 ஆயிரம் லிட்டராக குறைந்தது. தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்வதால் ஆவின் நிர்வாகம் கொள்முதலில் திணறி வருகிறது.
மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் ஆவினுக்கு பால் வழங்க பதிவு செய்துள்ளன. இதில் 380 சங்கங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால் தேனி ஆவினுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்தியதால், தேனி ஆவினிற்கு தினசரி 1.5 லட்சம் லிட்டர் பால் வரத்து இருந்தது. அதன் பிறகு தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் துவங்கியதால் ஆவின் பால் கொள்முதல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. தேனி மாவட்டத்தில் சேகரிக்கப்படும் ஆவின் பால் குளிரூட்டப்பட்டு மதுரை ஆவினுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு பேக்கிங் செய்து விற்பனைக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஆவின் பாலில் 4 சதவீத கொழுப்பு, 8 சதவீதஇதர சத்துக்கள் இருந்தால் ஒரு லி., ரூ.35 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு தினசரி 50 ஆயிரம் லி., பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது வறட்சி, அதிக காற்றால் கொள்முதல் குறைந்து 38 ஆயிரம் லி., முதல் 40 ஆயிரம் லிட்டராக உள்ளது.
மாவட்டம் முழுவதும் உற்பத்தி சரிவு: இது பற்றி ஆவின் அலுவலர் ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில் வறட்சியால் பசுந்தீவனம், காய்ந்த தீவனங்கள் குறைந்துள்ளது. இதனால் பால் உற்பத்தி குறைந்துள்ளது. 50 ஆயிரம் லிட்டர் உற்பத்தி ஆகிறது என்றால், தற்போது 40 ஆயிரமாக குறைந்துள்ளது. உற்பத்தி குறைவால் தனியார் பால் நிறுவனங்கள் கூடுதல் தொகை வழங்கி கொள்முதல் செய்கின்றன. தனியார் லிட்டருக்கு ரூ. 45 வரை வழங்குவதாகவும், அந் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அட்வான்ஸ் தொகை வழங்குவதால் பலரும் தனியாருக்கு பால் வழங்க ஆர்வம் காட்டுகின்றனர். பால் கொள்முதல் விலை உயர்த்திட உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது பற்றி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். தற்போதுள்ள விலையை விட கூடுதலாக ரூ. 5 வரை உயர்த்த வாய்ப்புள்ளது. பால் உற்பத்தியை பெருக்கவும் கொள்முதலை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும்
-
ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளுடன் முதல்வர் விஜய் நாளை முக்கிய ஆலோசனை
-
ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
-
இயற்கை சாகுபடி சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
-
மகளிர் கல்லுாரியில் தீ தடுப்பு விழிப்புணர்வு
-
பந்தலுாரில் பகலில் ஒரு இரவு: கடும் குளிரால் மக்கள் அவதி
-
நில அளவை உதவி இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு