தினமலர் செய்தி எதிரொலி சாலை நடுவே ஏற்பட்ட பள்ளம் சீரமைப்பு
புதுச்சத்திரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, திருச்சோபுரத்தில் சாலையின் நடுவே ஏற்பட்ட, பள்ளம் சீரமைக்கப்பட்டது.
கடலுார் முதுநகர்– திருச்சோபுரம், தேசிய நெடுஞ்சாலையில் பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் நிலை இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், அந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை நேற்று சீரமைத்தனர். இதனால் அந்த சாலையில் செல்லும், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றமில்லை! இந்த வாரம் ஒசைரி நுால் விலையில்... வாராந்திர விலை நிர்ணயம் திட்டவட்டம்
-
சைக்கிளிங் போட்டி பங்கேற்க அழைப்பு
-
விளம்பர விருப்பம் பள்ளி பராளுமன்ற தேர்தல்மாணவ, மாணவியர் ஆர்வம்
-
இன்றைய மின் தடை
-
விளம்பர விருப்பம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடமாடும் விண்வெளி கண்காட்சி
-
எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் மாணவியருக்கு வரவேற்பு
Advertisement
Advertisement