இளம்பெண் தற்கொலை

நெல்லிக்குப்பம்: இளம்பெண் தற்கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்த ராமு மகள் வினோதா,26; தனியார் சர்க்கரை ஆலை ஒப்பந்த பணியாளர். இவரை பெற்றோர் வேலைக்கு செல்லாமல், திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தி வந்தனர்.

இதற்கு வினோதா சம்மதிக்காததால் குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் துாக்கிட்டு இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement